வலி

நகரா நிமிடங்களில்
உன் ஞாபகங்களை
துணையாக்கிக் கொள்ளவே
இயலாத இந்த முயற்சி


இழந்த நிஜங்களை எல்லாம்
ஒன்று திரட்டி மூட்டை கட்டி
விதியின் அறைக்குள் போட்டு
காலத்தின் கதவுகளை அடைத்து
விநாடிக் கம்பிகளை சாவியாக்கி
மணித்தியாலங்களுக்கு நிமிடங்களால்
பூட்டுப் போடா எத்தனிக்கிறது மனது ........

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (23-Jul-14, 8:56 am)
சேர்த்தது : முன் பனி
Tanglish : vali
பார்வை : 73

மேலே