அடிமாட்டுக் கதை

எனக்கு பிடிக்கவில்லை
களப்பணியாற்றி சாவு துடைக்காத
இலவு காத்த கிளி கவிதைகள்
எனக்கு பிடிக்கவில்லை

வரம்பு மீறலில்
வார்த்தைகள் போட்டு
விரசம் தொட்டுச் செல்லும்
இந்த சிருங்காரம்
பூஜ்ய பூகோளத்தின்
பூஜயம் அளவுகூட புரட்டிப் போடவில்லை.

நடிகையின் நளினம் தொடும்-
நம்மவர் வியர்வை மறந்து
கனவு சங்கீதத்தில் இட்டுச் செல்லும்-
இந்த கவிதைகள் எனக்கு
பிடிக்க வில்லை

அவலச் சங்கிலிகள்
அங்கமெங்கும் புரண்டிருக்க
கோடியில் புரளும்
கூத்தாடிகளை கோபுரமாக்கும்-
இவனுக்குள் யோசிப்பவன்
இருக்கிறான் என்பதையே மறக்கச் செய்யும்-
இந்த கவிதைகள் எனக்கு பிடிக்க வில்லை

என்செய்வேன்
இவைகளை நானும் எழுதினேன் எனும்போது
எனக்கு இந்த கவிதைகள் பிடிக்க வில்லை

நிஜம் தொலைத்த இரவில்
நியமத்தை தொலைத்து
எதைத் தேடினேனோ அது தராத
இந்த கவிதைகள் எனக்கு பிடிக்கவில்லை..

என் பேனாவின் மையை கொட்டி
வறியவர் கொட்டும் ரத்தம் நிரப்பி
எழுத புறப்படுகிறேன்
இனியாவது என்கவிதை
எளியோரை பாடட்டும் ..
இனியாவது என் கால்கள்
தெருவுக்கு வந்து போராடட்டும்...

எழுதியவர் : சுசீந்திரன். (23-Jul-14, 8:20 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 43

மேலே