இறைவா ஒரு சொல் கேளாய்

உச்ச வெறி கொண்டு
உயிர் வதம் செய்தான்
சொத்தில் தகராறாம்
சொந்த தந்தையிடம் ................

கள்ள காதலியின்
கற்பில் ஐயமாம்
அரிவாளால் ஒரே வெட்டு
கற்பு அது தப்பியது

குருவி சேர்த்த பணமாய்
கூட்டிற்குள் அடக்கினான்
கொள்ளை போனது
குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் ...........

பத்து வயது சிறுமி தானே
பார்த்து பழகிய மனிதர் தானே
பக்கத்து வீடு சென்றாள்
ஈன பிறவி அவன் விளையாட்டில்
பித்தானாள் பிஞ்சு ..............

குடி குடியை கெடுக்கும்
நான்காம் நிலையில் நாற்சக்கரம் ஓட்டினான்
எதிரில் வந்தவன்
எமனிடம் சேர்த்தான் .........

அரசாங்க அலுவலகம் இது
என் அலுவல் செய்ய வேண்டும் வெகுமதி
பிச்சை கேட்டான் இருபதாயிரம் சம்பளக்காரன்
இருநூறு ரூபாய் கூலிவேலைக்காரனிடம்...............

ச்சீ .............என்ன சமூகமடா இது......
மாற்றம் என்பதில்லையோ ?
இறைவா உன் ஞான கண்ணில் படவில்லையோ?


கீதையின் நாயகரே............
ரட்சிப்பின் மீட்பரே............
நபிகள் நாயகரே ................
கேட்பீரோ இதனை............

அழுக்கடைந்த சமூகத்தில்
அக ஒளி தேடினேன் ..........
மீட்பு எங்கே ஓடினேன்


என் பகுத்தறிவு என்னை கேட்டது....
உண்டியல் கொள்ளை
கோவில் சிலை திருட்டு
முதலில் அந்த கோப்புகளை
பார்க்க சொல் இறைவனை என்றது.........

எழுதியவர் : gowthamitamilarasan (24-Jul-14, 12:05 pm)
பார்வை : 151

மேலே