என் கனவு தேவதையே

என் கனவு தேவதையே......(காதலன் தவிப்பு)

என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
எண்ணங்களை சேர்த்து
நினைவுகளை வார்த்து
கவிதையாய் வடிக்கிறேன்
என் கனவு தேவதைக்கு........

ஓர விழிப் பார்வையால்
ஓராயிரம் கவிதை சொல்லி
ஒரு நொடியில் மறைபவளே!.........

இதழ் பிரியா புன்னகையால்
இதயத்தைக் களவாடி
இம்சித்து செல்பவளே!.......

நிஜம் தன்னில் நுழையாமல்
நினைவில் மட்டும் வந்து
நில்லாமல் போறவளே!.......

யாருமில்லா என் இரவில்
மறுநிமிடம் களைந்து போகும்
கனவாக மட்டும் வருபவளே!........

கண் இமைக்கும் நொடி கூட
நிலையில்லா உன் பிம்பம்
கொள்ளாமல் கொல்லுதடி!..........

கன்னங்கரு விழிகளால்
கலைகள் பல காட்டிக் கொண்டே,
கலையாத பேரழகால்
கதிரவனையும் மயக்கி விட்டு,
கள்ளமில்லா பொன் சிரிப்பால்
கடவுளையும் கவர்ந்து கொண்டு,
மங்காத முழு நிலவாய்,
பஞ்சு நிகர் பாதம் கொண்டு
கலைகின்ற கனவில் மட்டும்
தங்கத்தேறாய் வருகிறாயே!
தரிசனமும் தருகிறாயே!

நித்திரையின் நடுநடுவே
நிதர்சனமாய் வருபவளே!
நிஜம் தன்னில் வருவாயா?
நேசமது புரிவாயா?

தாரமாக வருவாயா - என்
தங்கத் தாரகையே!
கண்ணிமையையும்
வெட்டி விட்டு
காத்திருக்கிறேன்
கண் இமைக்காமல்
உனைக் காண!......

வருவாயா என் உயிரே?
வருவாயா என் அழகே?
வருவாயா என் வாழ்வே?

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (24-Jul-14, 2:55 pm)
சேர்த்தது : shoba karthik
பார்வை : 166

மேலே