தீராக் காதல்

குறுகுறுக்கும் எனது விழிகளை
கட்டி வைக்கிறேன்...
உன்னை பார்க்க கூடாது என்று ...

பரபரக்கும் கால்களை
தட்டி வைக்கிறேன்...
உன்னை பார்க்க செல்லக் கூடாது என்று...

துறுதுறுக்கும் விரல்களை
பொறுமை காக்க சொல்கிறேன்...
உனக்கு குறுஞ்செய்தி
அனுப்பக் கூடாது என்று....

உன்னை நினைக்கும்
சிந்தையை குறை சொல்கிறேன்

அதனால் என்னை
நானே வேதனைப்படுத்திக் கொள்கிறேன் ..

காத்திருக்கட்டும்
காத்திருப்பதில் தான்
சுகமே....

காத்துக்கிடந்து பார்த்தால் தான்
அன்பின் அருமை புரியும்........

எழுதியவர் : சாந்தி (25-Jul-14, 11:11 pm)
Tanglish : theeraak kaadhal
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே