அது அனிதாதானே?

பள்ளிதோழிகளை படிக்க சொல்லி
பாடத்தினை நடத்தி விட்டு
ஆண்பிள்ளைகளை தறுதலைகள்
அவர்களாவது திருந்துவதாவது
தமிழாசிரியர் சொல் இது
தறுதலைகள் நாங்கள் மறுபதற்கில்லை

சங்கீத குரல் கொண்டு
சத்தம் பெரிதாய் இல்லாமல்
வாய்க்குள்ளே படித்தாலும்
வார்த்தைகளை கவனித்தேன்
காதலா நட்பா அவள் மீது
காரணம் இதுவரை தெரியவில்லை

செவிக்குணவு அவள் சிந்த
சீர்பெற்றது கல்வியென்று
கற்ற கல்வி கையளவு
கடப்பாரையில் தோண்டியதால்
மணற் நிறைந்த மனக்கேணி
மாறிகொண்டது அறிந்து கொள்ள

இறுதி தேர்வில் முதல் மதிப்பெண்
என்னாலே எடுக்க முடிந்ததால்
வியந்து போனார் தமிழாசிரியர்
விவரம் அவருக்கு புரியாது
அரசாங்க பள்ளியதனால்
அவரால் அடித்து திருத்தமுடியாமல்

எப்படிடா நீ படித்தாய்
இவ்வளவு பெருமைகளை நீ பெற்றாய்
தப்பு செய்யும் தறுதலைக்குள்
தங்கம் இருந்தது தெரியவில்லை
தமிழ்மொழியோ ஆங்கிலமொழியில்
தறுதலைகளால் கலந்த போதும்

சுத்தம் செய்வது உன் பொறுப்பு
சொல்லிகொடுத்தார் தமிழாசிரியர்
அப்போதெல்லாம் அவள் நினைப்பு
அடித்து சொல்லியது நட்பேயென்று
காலங்கள் கடந்த போது
காதலாகியது தமிழின் மீது

எழுதியவர் : . ' .கவி (17-Mar-11, 3:24 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 340

மேலே