இது அவங்க பிரச்சனை இல்ல

அவர்கள் முதலில் வந்தார்கள் - கம்யூனிஸ்டுகளை நோக்கி
நான் ஒன்றும் பேசவில்லை- ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை

பிறகு அவர்கள் வந்தார்கள் - சமவுடமைவாதிகளை நோக்கி
அப்போதும் நான் பேசவில்லை- ஏனென்றால் நான் சோஷலிஸ்ட் இல்லை.

தொழிலாளர் சங்கங்களை அவர்கள் நசுக்கியபோதும் நான் மவுனமாயிருந்தேன்
ஏனென்றால் நான் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவன் இல்லை.

பின்னர் யூதர்களைக் குறி வைத்து அவர்கள் வந்தார்கள்
எனக்குக் கவலையில்லை - ஏனென்றால் நான் யூதன் இல்லை.

பிறகு அவர்கள் என்னை நோக்கி வந்தார்கள் -
அப்போது எனக்காகப் பேச யாரும் இல்லை!

(குறிப்பு
-அப்போதைய ஹிட்லர் / நாஜி பற்றிய மார்டின் நீய்மொய்லர் கவிதை எப்போதும் பொருந்தும்.)

எழுதியவர் : எழுதியவர்-மார்டின் நீய்ம (28-Jul-14, 8:44 am)
பார்வை : 113

மேலே