நாட்டு நடப்பு
உள்ளத்தில் உள்ளதெல்லாம் உளறாதே
கள்ளத்தனமேன்று சொல்வாரடி தங்கமே
நாணயம் நாட்டில்லில்லை நண்பர்களே
நான்கெழுத்து கற்றாலும் நல்லவைகள் செய்தாலும்
நன்மை என்று சொல்லமாட்டார் நங்கையரே விந்தையிலே
முதன்மையிது இந்தியாவின் நிலைமையிது
விண்ணுலகில் உலவிவரும் வெண்ணிலவின் தண்ணொளியை
அள்ளிவந்து தந்திடுனும் நன்றி இல்லை என்று உரைப்பர்
முள்ளிலிட்டு பின்னிவைப்பர் மானிடரே தொல்லை இன்றி
திண்ணையிலே குன்றியிருந்து கொளுறைப்பர் அன்றிருந்து
இன்றுவரை அறம் வளர்த்த மன்னவரை தின்று விட்டு திசை திரும்பும்
மானுடமே!! மனிதரிலே தெய்வங்களை உய்வதர்க்கே விடுவதில்லை
கலியே முற்றியதோ காலமே கெட்டதோ கடவுளே