உருத்தல்

என்ன பிறவி இது
இல்லாமையை உடலில் பூசி இயலாமையை வெறுமனே மனதில் வைத்து உடல் குறையை பெரிதாய் எண்ணி மனித வவலிமையை துச்சமாய் எண்ணி பசி என்ற உருவமில்லாகுழந்தையை என் ஈர வயிற்றில் கோரமாய் சுமந்து கொண்டு இல்லா பாத்திரம் ஏந்தி நிற்கிறேன் பொருள் இருந்தும் மனம் இல்லா மனிதரிடம்...

எந்நிலை அறிந்தால் எனக்கே வெட்கமாய் உள்ளது ...

கோவிலின் வாசலில் நான் அமர்ந்திருக்க கல்லினால் உடல் கொண்டிருக்கும் இல்லா இறைவனை காண மனதை கல்லாக வைத்திருக்கும் மக்கள் இங்கே வருகின்றனர் ஆனால்
இங்கே தினம் பூசசெய்து மந்திரம் ஓதும் அர்ச்சகர் காணாதஇறைவனை இவர்கள் காண நினைக்கிறார்கள் ஆனால் கிடைப்பது மூடநம்பிக்கையும் ஏமாற்றமும்தான

பிறகு உணர்ந்தேன்

ஏதுமில்லாத ஏழையாய் நான் வெளியில் வாட எல்லாமிருந்த ஏழையாய் அவர்கள். உள்ளே தேட
ஓரிரு சில்லறை நிறைந்த தட்டை வைத்துக்கொண்டு சிரிக்கலானேன்
எல்லாம் உள்ள ஏழையையும் இல்லாத இறைவனையும். பற்றி ...

எழுதியவர் : சத்யராஜ் (29-Jul-14, 6:15 pm)
சேர்த்தது : R.SATHYARAJ
பார்வை : 51

மேலே