ஆதர்ச தம்பதி

மொத்தமாக கொட்டும் அருவியை விட
சிறு கீற்றாய் வழியும்
மலை வழி நீர் மிக அழகு......

அது போல நீ கண்ணீரை
மழையாக கொட்டும்போது
நான் ஆறுதல் சொல்வதை விட,
உன் கரு விழிகளில் இருந்து
மெதுவாக உருண்டு உன்
கன்னமெனும் கோப்பை வழியாக
மெல்ல சிதறும் ஒரு துளி கண்ணீரை
துடைத்து உனக்கு ஆறுதல்
சொல்லி ரசிப்பதையே நான் விரும்புகிறேன்
என் செல்லமே...

இதை காதல் ரசனை என்று
மட்டும் ஒரு வரிக்குள் அடைத்து விட
முடியாது.......

ஒரு குடைக்குள் ஒதுங்க
வேண்டும் மழைக்கு...
ஒரு துண்டில் தலை துவட்ட வேண்டும்
குளிரில்....

ஒரு தட்டில் சாப்பிட வேண்டும்
பசியில்....

ஒரு கோப்பையில் காபி குடிக்க
வேண்டும்
தலைவலியில்.....

ஒரே தலையணையில்
தலை சாய்க்க வேண்டும்,
தூங்க வேண்டும் என்ற
எண்ணம் வரும் போதெல்லாம் ....

ஆதர்ச தம்பதி என்றே
எப்போதும் பேர் வாங்க வேண்டும்
எத்தனை பிறவி எடுத்த போதும்......
நடக்குமா கண்ணே
நான் நினைப்பது??

(இந்த கவிதை ஏற்கனவே நான் தளத்தில் பதிவு செய்ததுதான்...மீண்டும் ஒரு முறை இதை பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு சிறு ஆசை ..அதனால் பதிவு செய்துள்ளேன்...

எழுதியவர் : சாந்தி (30-Jul-14, 11:19 pm)
பார்வை : 217

மேலே