மண்ணில் தவழும் என் மடி மீன்-

மண்ணில் தவழும் என் மடி மீன்-வித்யா
மண்ணில் தவழும் என் மடி மீனே
என்னில் பூத்த நீ என் விண்மீனே..........!!!
உன்னிதழ் நனைத்து முலைகளின் தாகம் தனித்தேனே
தாய்சேய் பொதுமொழி தாய்ப்பால் கொண்டு ஊட்டினேனே.........!!!
கருவில் நுழைந்து நெஞ்சில் நிறைந்தாய்-என்னுயிரே
அரைத்தூக்கத்தில் நீ என் மடி தவழ்கையிலே........!!!
அந்திவானம் அழகில்லை; பூலோகம் சுகமில்லை-என்னழகே
நீ பால்சப்பும் அழகோடு ஒப்பிட மனமில்லையே...........!!!