இன்ப அவஸ்தை

காதலில் காதலன் காதலியை பற்றி சிந்திக்கும்போதெல்லாம்
படும் இன்பஅவஸ்தைகள்.

இமைகளின் இசைவுகூட இடிமுழக்கமாய்
இதயத்தில் இடித்துவிட்டு இசையாய்மாறும்.

புருவஒதுக்கல்கள் புதிதுபுதிதாய் புதுக்கவிதை
புகட்டி புகழில் புகுத்தும்.

உதட்டுச்சாயம் உயிரை உதித்து
உதிரம் உறுஞ்சி உறவாடிச்செல்லும்,

சிரிப்பால் சிரம் சிதறியோடுவதுபோலாகும்
சிலநொடிகள் சிந்தனையும் சிறைசெல்லும்.

அன்னநடை அகிலச்சுழற்சி அறியச்சியும்
அதன்பின் அமுதில் அமிழ்த்தும்.

திடப்பேச்சு திசைமாறி திரியச்செய்து
திகைப்புத் திடலில் திணிக்கும்.

பாதச்சுவடு பாமரனாக்கி பார்கடல்அமிழ்த்தும்
பார்வையும் பாரமாகி பாயில்கிடத்தும்.

எழுதியவர் : அருண் (2-Aug-14, 2:39 am)
பார்வை : 91

மேலே