===+++அதிர்ச்சிகரமானத் தகவல்+++===

''அதிர்ச்சிகரமானத் தகவல்.'' இந்தியாவில் 30 நிடத்திற்கு ஒரு பெண் வல்லுறவிற்கு பலியாகிக்கொண்டு இருக்கிறாளாம்.''

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் எப்பொழுதும் உலவிகொண்டேதான் இருக்கிறது. எந்த ஒரு ஒழுக்கமற்ற விடயத்திற்கும் அது முண்டியடித்துக்கொண்டு முன்னே வந்துவிடுகிறது. அந்த மிருகத்தை அடக்கியாளும் சக்தியையும், ஒழுக்க நெறியையும் இன்றைய மனிதன் முற்றிலும் இழந்துகொண்டு இருக்கிறான். இதன் விளைவாகத்தான் இந்த மானுடம் அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனிமனித ஒழுக்கம் என்பது உயிரினும் மேலான பண்பாகும், ஆனால் இன்று, தான் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் நியாயம் கற்பித்துக்கொண்டு இருக்கிறான் இன்றைய கேடுகெட்ட மனிதன்.

நமக்குள் இருக்கும் நல்லெண்ணங்களை உறங்கடித்துவிட்டு, கெட்ட எண்ணங்களான பேராசை, பணவெறி,பொறாமை, வன்மம், காமம், இழிவான இச்சைகள், என்று நமது மனது முழுக்க அந்த மிருகம் பல அவதாரங்களாக வெளிபடுகிறது. இதன் விளைவாகத்தான் மனிதத்தன்மை சீரழிந்து கிடக்கிறது.

காமம் என்பது கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான ஒரு சுகமான புனித உறவாகும். ''அந்த உறவில் உள்ள ஒழுக்கம் தவறாத உண்மை நெறியே நம்மை உண்மையான மனிதனாக நிலைக்கச் செய்யும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.'' இன்றைய சூழ்நிலையில் பார்த்தல் நாடெங்கும் காம மிருகங்களின் அட்டுழியம் தலைவிரித்தாடிக் கொண்டு இருக்கிறது.நாகரிகம் ஒழுக்கம், பண்பு, கலாச்சாரம் போன்றவற்றில் உலகிற்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்த இந்திய திருநாடு இன்று எவ்வளவு கேபலமான நிலையில் கிடக்கிறது என்பதை ஒரு இந்தியனாக இருந்து யோசித்துப்பாருங்கள்.

பொதுவாகவே, புரட்சியையும் சமூகத்தையும், சமூக அவலங்களையும், தமிழ் தேசியத்தை பற்றி மட்டுமே எப்பொழுதும் யோசிப்பதையும், படிப்பதையும் வழக்கமாகக் கொண்ட நான், கீழே தரப்பட்டுள்ள சங்கதி24 செய்தி இணையதளத்தின் இந்த கட்டுரையைக் கண்டு கொதிப்படைந்துவிட்டேன். அதனால்தான் இந்த சமூகத்தின் மீதுள்ள எனது கோபத்தை எழுத்தாக்கினேன். கீழ உள்ள சங்கத்தி 4 தளத்தின் கட்டுரையை வாசித்துப்பாருங்களேன், இந்திய குடிமகனான எனது கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதென்று உங்களுக்கும் புரியுமென்று நினைக்கிறேன் - உங்களுக்குள்ளும் இந்த ஆதங்கத்தீ பற்றி எரியுமென்று நினைக்கிறேன்.

இவன்
நிலாசூரியன்.

சங்கதி24 இணையதளத்தில் நான் கண்ட கட்டுரை.
******************************************************************
காமன்வெல்த் மனித உரிமைகள் ஆற்றல் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2001 முதல் 2013–ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து சர்வே நடத்தியது.

குறிப்பாக பெண்கள் வல்லுறவு விகிதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.

அதில் நாள்தோறும் 30 நிமிடத்துக்கு ஒரு பெண் காமுகர்களால் வல்லுறவுக்குள்ளாவது தெரியவந்துள்ளது. கடந்த 13 வருடங்களில் நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 844 வல்லுறவு வழக்குகள் பதிவாகி உள்ளன.

அவற்றில் டெல்லியில் மட்டும் 8,060 வல்லுறவுகள் நடந்துள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 56 வல்லுறவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதற்கிடையே 2001–ம் ஆண்டில் மட்டும் 16,075 வல்லுறவு வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 33,707 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இது 52.30 சதவீதம் அதிகமாகும்.

மராட்டியத்தில் வல்லுறவு வழக்குகள் 135 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது. அங்கு 2001–ம் ஆண்டில் 1,302 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 3,063 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகம், ராஜஸ்தான், உத்ரகாண்ட், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2001–ம் ஆண்டில் 2 மடங்கு வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளன.

2013–ம் ஆண்டில் பாலியல் வன் கொடுமை சட்டம் திருத்தப்பட்டது. அதை தொடர்ந்து மேற்கண்ட மாநிலங்களில் இது குறித்த வழக்குகள் அதிக அளவில் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன. சட்ட திருத்தத்துக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் வல்லுறவு குற்றங்கள் குறைந்துள்ளன. 2012–ம் ஆண்டில் 2046 ஆக இருந்த வல்லுறவு சம்பவம் 2013–ம் ஆண்டில் 1685 ஆக குறைந்து இருந்தது.

டெல்லியில் 8,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு (7,875 வழக்குகள்), கர்நாடகா (6,204), குஜராத் (4,981) ஆகிய மாநிலங்களை விட அதிக அளவாகும்.

2012–ம் ஆண்டில் 1 லட்சத்து ஆயிரத்து 41 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 785 வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. அதில் 2013–ம் ஆண்டில் 14,717 வழக்குகளும், 2013–ம் ஆண்டில் 18,833 வழக்குகளும் விசாரணை முடிக்கப்பட்டன.

2012–ம் ஆண்டில் 3,563 பேருக்கு வல்லுறவு வழக்கில் தண்டனை கிடைத்தது. அதே நேரத்தில் 2013–ம் ஆண்டில், 5,101 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
சங்கத்தி 24 இணையம்.

எழுதியவர் : சங்கதி24 -(நிலாசூரியன்). (3-Aug-14, 3:24 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 172

மேலே