வெளிச்சம் என்பது இருளிலும் தெளிவு

இலக்கினை அறிந்தே
இறகினை விரித்தேன்
இனிமையைப் புரிந்தே
இதயத்தை திறந்தேன்....!!

இரவிலும் இமைக்குள்
இதமானதோர் விடியல்..
இசை எனக் கேட்கிறேன் என்
இதயத் துடிப்பு.......

இப்போது உணர்கிறேன்
இம்மண்ணில் உயிர்கள் அழகு
இந்த நொடி என்பது இனிதோ இனிது
காரணம்............
இப்போது என் மனதில் ஈடிலா அன்பு...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Aug-14, 6:41 am)
பார்வை : 350

மேலே