திங்கள் அன்று காலையில்

திங்கள் அன்று காலையில்,
தேகம் எங்கும் பயத்துடன் !
மீண்டும் செல்ல வேண்டுமா ?
மனம் ஒவ்வாத வேலைக்கு...
இந்த கால இளைஞர்களின்,
இதயத் துடிப்பு இதுவே !
ஏன் செய்திட வேண்டும் ?
மனம் ஒவ்வாத வேலையை ?
திறமையை நிரூபித்து காட்டலாம்
விருப்பம் நிறைந்த வேலையில் !
திங்கள் அன்று காலையில்,
அலைய வேண்டாம் பயத்துடன் !

எழுதியவர் : கர்ணன் (4-Aug-14, 9:26 am)
சேர்த்தது : சிவா (கர்ணன்)
பார்வை : 87

மேலே