இன்றைக்கு பைனல்

" டாக்டர் ! தினமும் எனக்கு வினோதமான கனவெல்லாம்
வருது. நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும் ."

" என்ன மாதிரி கனவு ?"

" தினமும் கழுதைகளோட நான் கால்பந்து
விளையாடுறதா கனவு வருது "

" தினமுமா ?"

" ஆமாம் .ஆனா ஒவ்வொரு நாளும் வேறு வேறு கழுதை
குழுவோடு விளையாடுகிறேன் . சில சமயம் நான் ஜெயிக்குறேன்
சில சமயம் அவங்க ஜெயிக்குறாங்க "

டாக்டர் ஒரு போத்தல் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து <
"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க .
இம்மாதிரியான கனவுலேந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை
கிடைக்கும் ." என்றார் .

"சரி டாக்டர் ! நாளைலேந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கிறேன் ."

" என் நாளைலேந்து ? இன்னிக்கு என்னாச்சு ? "

" அது வந்து டாக்டர் , இன்னிக்கு ராத்திரி ' பைனல்ஸ் ' இருக்கு ."

???????????

எழுதியவர் : (7-Aug-14, 12:40 pm)
பார்வை : 212

சிறந்த நகைச்சுவைகள்

மேலே