நிஜம்
நீ உடைப்பதற்காகவே
உருவெடுத்து
உயிர்பெறுகின்றன இந்த
காற்றுகுமிழிகள்...........
உன்
மூச்சில் உயிர் பெறுவதற்காகவே
உரசாமல் போகின்றது காற்று
நிஜம் அணிந்த
நீர் குமிழிகளை.......
வட்டமாக பிறந்தபோதும்
உன்கைகள்
உருட்டி விளையாடாத போது
வண்ணம் இழந்துபோகிறது
வாழ்வில்லா பந்துகள்!!!