இரண்டாம் பருவம் -- ஆறாம் மரணம்

அவன் --
சூழ்நிலைக் கைதி என்பார்களே
காலம் கனிந்து கண்முன்னே
காதலித்தவள் காதலைச் சொல்ல
கற்சிலையாய் நின்றேனே
நான் என்ன செய்ய!

மனதை கல்குகையாக்கிக் கொண்டு
காதலை அதில் மறைத்துக் கொண்டு
வாழ்க்கையின் வெற்றியை தேடிக் கொண்டு
நடைபோடுவேன் முடிவு எடுத்துக் கொண்டு!

அவள் --
புரியாத புதிராய் காதலை மறுத்தானே
ஒருவேளை எதோ காரணத்துக்காய் வெறுத்தானோ
மனக் குழப்பத்தில் பல புதிர்முடிச்சுக்கள்
அவிழ்க்க விரும்பாமல் வாழ்க்கைத் தொடர்ந்தது!
அவனின் எந்த ஒரு நினைவுக் கறைகளை
அவளின் கண்ணீர கழுவிக் கொண்டிருந்தது!

கல்லூரிக் காலம்
முடிந்தது அவனுக்கு
வேலைக் கிடைத்தாயிற்று
பெற்றவர்கள் தன்விருப்பத்திற்கு
இசைவார்கள் என்றே
நம்பிக்கை பிறந்தாயிற்று!

மூன்று வருடங்கள் ஆயிற்று
அவளைப் பார்த்து! -- இன்று
அவளிடம் சொல்லியாக வேண்டுமே
அவளைத் தேடி
என் பயணம் ஆரம்பமானது!

முதலில் கல்லூரிவாசல்
பின்பு அவளின் தோழியின் வீடு
பின்பு அவளின் அலுவலகம்
அன்று அவள் விடுப்பில் இருந்தாள்
அங்கிருந்து அவளின் வீடு

உச்சகட்ட மன ஆர்ப்பரிப்பில்
இதோ அவள் வீட்டின் வாசலில் நுழைய
தாம்பூலத்தட்டு கை மாற்றிக் கொள்ள
அவளுக்கு நிச்சயத்தாம்பூலம் நடந்துக் கொண்டிருந்தது!

காட்சிகள்கூட கொலை செய்யும்
ஆம்! இந்தக் காட்சி செய்த கொலை
அவனை ஆறாம் மரணத்தில் தள்ளியது!

எழுதியவர் : அலெக்சாண்டர் (10-Aug-14, 1:03 am)
பார்வை : 54

மேலே