அமரர் சுசீலா மணி நினைவு கவிதை போட்டி

அமரர் சுசீலா மணி நினைவு கவிதை போட்டி

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடை வண்டி நீ ....
கரிசனக் களிம்புக்க் காரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்

அனுபவத்தின் அகராதியே ....!
எனக்கு தன்னம்பிக்கையை ஊட்டி
இலக்கை அடையவைத்து
அழகு பார்த்தவரே ......!

என் முக வரிக்காய்
உன் விலாசத்தை தொலைத்தவரே !
நான் சூரியனாய் வலம் வர -உன்னை
எரிதுக் கொண்ட மெழுகு வர்த்தியே....!

என்னை சுமந்தவள் தாய் என்றால் -என்
எதிர்கால கனவை சுமந்தது அப்பா நீ தானே ...!
எனக்காய் நீ கல்லூரி வாசலில்
வரிசையில் நின்ற நாட்களை
மறந்துப் போனேனே ...!-அப்பா என் தெய்வமே
இன்றும் நீ எனக்காய் வரிசையில் தான் நிற்கின்றாய்
அந்த கடவுளிடம் கை ஏந்தி ........!

டாலர் உலகத்தில் இளமை முறுக்கால்
ராஜா கோபுரமாய் உயர்ந்து நின்ற உன்னை
முதியோர் இல்லத்தில் சேர்த்து வெறும்
படி கல்லாய் மண்ணில் புதைத்து விட்டேனே
இருந்தாலும் அப்பா நான் இளைப்பாற
தாயின் மடியாய் காத்திருக்கும் உன்னை
மறந்துப் போனேனே .....!-பிள்ளைகளே !பிள்ளைகளே !

அப்பாவின் உள்ளங் கைகளை என்றாவது
பிரித்துப் பார்த்ததுண்டா ..? -அதில் இருப்பது
ரேகைகள் இல்லை ! பிள்ளைகளின்
எதிர்கால வரை படங்களே

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (10-Aug-14, 5:42 am)
பார்வை : 98

மேலே