தன்னைத் தரியாக்கி என்னை உருவாக்கிய என் அக்காவிற்கு

விண்ணில் இருந்து வீழ்ந்த என்னை
மண்ணில் தாங்கியவள் நீ !
எங்கு கற்றாய் மண்ணாய் இருந்த என்னை
மனிதனாக்கும் கலை !
எத்துனை சிரமப்பட்டாய் என்னை
சிறப்பாய் உருவாக்க !
சிலருக்கு பிடிக்க வில்லையே
நான் சிரிப்பதுகூட !
நீ ஆழ்ந்து செதுக்கியதால்
அழகானது என் அறிவு !
அதை அழுக்காக்கி ! அழகூட்டி !
தன்னுடய தென்கின்றனர் சிலர் !
அன்று புரியவில்லை நீ சொன்னது
புரிந்துவிட்டது இன்று !
புதியவன் அல்ல அவன் என்றாலும் புதிதாய்தான்
இருக்கிறது அந்த பழையவனின் செயல் !
கலங்கியதில்லை ஒரு நாளும் காரணம்
நீ இருந்தாய் என் கலங்கரையாய் !
நீ அடித்தபோதுகூட வலிக்கவில்லை
காயத்தில் மருந்து வலிக்குமா என்ன !
இதுவரை கலங்காத என் கண்களில்
கரைபுரண் டோடுகிறது கண்ணீர் !
கலை -யிழக்கப் போகும் என்
ஆய்வகத்தின் நிலையை எண்ணி !
காலங்கள் கடந்தாலும் கரைந்துபோகாது
என் நெஞ்சில் கரைந்த உன் நினைவுகள் !
கடிந்துகொள்ளவாவது கூப்பிடு
காத்திருக்கும் என் கைபேசி !
இராசி இல்லாதவள் என்று உன்னை சொல்வாயே
தன்னை உயர்த்த உன்னைப் பயன்படுத்திய
கூட்டத்தை பிரியப் போகும் நீ இராசியானவல்தான் !
உண்மையில் இராசி இல்லாதவன் யார் தெரியுமா !
என் அன்னைக்குபின் என்னை நேசித்த
அக்காவைப் பிரியும் நான்தான் !
நீ எங்கு இருந்தாலும் ஒரு முறை
உன் தம்பி என்னை நினைத்துக்கொள்
என்றாவது என் பெயரை நீ கேட்டால் !
அதுபோதும் எனக்கு
==============================================================================================
தன்னைத் தரியாக்கி
என்னை உருவாக்கிய
- என் அன்பு அக்கா கலைச்செல்விக்கு
என்றும் அன்புடன் உன் பிரியமான தம்பி
த.பிரவீன்குமார்(முகில்)