வாழ்க்கைப் பாடம்

தமிழ் கவிதையால் வருணித்த நான்
ஆங்கில முத்ததால் அவள் இதழ்தொட்டு இதயம் வருடினேன்
கணக்கு சரி வர
பிசிக்கல்(இயற்பியல்) டச்சால் எங்களுக்குள்
கேமிஸ்ட்ரி(வேதியியல்) ஒர்க் அவுட் ஆக
பையோலாஜி(உயிரியியல்) ஃபர்ம் ஆன செய்தி
வரலாற்று பக்கங்களில் வரியாக
குடி(யுரிமை)மையியல் இருந்தும் இல்லாத நாட்டில்
புவியியல் மாற்றத்தால் புயுலொன்று வர
கணிப்பொறி(யியல்) யுகத்தில்
கணக்கு பதி(வியல்)வுகள் சரியாக இல்லாததால்
வணிக(வியல்)ம் வீழ
பொருளாதாரம் பொருள் இல்லாதவனின் தாரமாக என் தாரத்தை மாற்ற
நுண்ணுயிர்(யியல்)களான குழந்தைகளுக்கு
சத்துணவு(யியல்) வழங்க முடியாமல்
ஆடை வடிவமைப்பில் ஒட்டை இருக்க
அற(ம்)யியல் இல்லா இல்லமாக என் இல்லம் மாற
புள்ளியியலில் இடம் பெற்றோம் இர(ற)த்தல் பட்டியலில்

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (11-Aug-14, 5:19 am)
Tanglish : vaazkkaip paadam
பார்வை : 372

மேலே