முத்தம் மொத்தமாகவும் சில்லரையாகவும்

LIP STICK உதட்டுல
FEVI STICK- ஒட்டிக்கனும்

கண்ணே!
போர்களம் போலிருக்கும் நெத்தியில
இதழால் போரிடனும்

கனியே!
EYE TEX போடும் கண்ணுக்கு
E-TAX- இச்சு தரணும்

ஜெயமே!
PONDS போடும் கன்னத்துக்கு
பன்ச் ஒண்ணு உதட்டால போடனும்

பூவே!
கம்மல் தொங்கும் காதில்
கமல் ஸ்டைலில் காதல் சொல்லனும்

பிரியமே!
ஆபரனம் ஆடும் கழுத்துக்கு
முத்(து)த ஆபரனம் நித்தமிடனும்

மொத்தத்தில் நித்தம் நித்தம்
சத்தமில்லாமல் முத்தமிடனும்
மொத்தமாகவும் சில்லரையாகவும்
அது முப்பொழுதும் ஆனந்தமே!

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (11-Aug-14, 5:24 am)
பார்வை : 255

மேலே