மையாளுமைமெய்யாலுமே
கண்விழித்த காலையில்
தெரிகிறது கண்ணாடியில்
கண் ஓரத்தில்!
வியக்கையில் ,
விரிகிறது விரல் இடுக்கிலும் !!
நீல மை.
நீல மையின் கதை
நீள்கிறது இன்னும்…..
கால் மிதியடியில் ஆரம்பித்து
கன்னம் தடவும்
கைப்பஞ்சு வரை….
மை மேல்
மையல்…
மையால்
மையாளுமை…
குழந்தையின் முதன்முதல்
மை எழுதுகோள்
நாட்கள்
தொடர்கிறது ….!
விரலில் படாமல்
இல்லை.
எதிலும் படாமல்
எழுதும் நாள்?,,,
வேண்டாம்.
இந்த இப்பொழுதே
இனிமையாயிற்று!