காற்று

காற்று இல்லையேல் உயிரினங்கள் இல்லை
காற்று தென்றலாக வந்தாலும்
வாடைக்கற்றாக, புயலாக , சூறாவளியாக வந்தாலும்
ஏற்றுக் கொள்ள வேண்டும்
அதை வெறுக்க முடியாது
காற்று இன்றி நாமேது
இன்னிசையும் ஒலிகளும் ஓசைகளும்
காற்றுடன் கலந்து நம் காதுகளுக்குள்
வந்து சேர்கிறது கேட்கின்றோம், ரசிக்கின்றோம் .

தூசியும் புகையும் நாற்றங்களும்
ஏன் நறுமணங்களும் காற்றுடன் கலந்தே வருகிறது
எல்லாம் நமக்கே , நம்முடனே
காற்று வேண்டும் சுத்தமான காற்றும் வேண்டும்
சுத்தமான காற்றை அனுபவிக்க
அசுத்தங்களை அகற்றி சூழலை சுத்தப்படுத்துவோம்
புகைகள் தூசிகள் நாற்றங்கள் நோய்கள்
காற்றுடன் கலந்து வருவதை
நம்மால் இயன்றளவு தடுப்போம்
தடுக்க முயற்சிகள் பல கண்டு கொள்வோம்
காற்றை சுத்தமான காற்றாக சுவாசிப்போம்
சுகமுடன் வாழ்ந்திட முயன்றிடுவோம்
காற்று நம் உயிர் , காற்று நம் வாழ்வு , காற்று நம் சுகம்.

எழுதியவர் : பாத்திமா மலர் (13-Aug-14, 10:00 am)
Tanglish : kaatru
பார்வை : 128

மேலே