சிரஞ்சீவி உறவுகள்

மீண்டும் துடித்திட ஏங்குது இதயம்
காட்சிகள் கண்டிட கலங்குது கண்கள்
கைகள், கால்கள் கிளர்ந்தெழவும்
நாடி நரம்புகள் புடைத்தெழவும்
புதிய சக்தி ஒன்று வந்திடாதோ?!
என பதறது மனது!!
ஜீவ மரண போராட்டத்தின்
மறுபக்கம்,
சொந்த வேலைகள்
சிதைந்திட்ட வேதனையில்
வழியனுப்ப காத்திருக்கும்
சிரஞ்சீவி உறவுகள்

எழுதியவர் : vinoth kalyan (11-Jun-10, 7:49 pm)
சேர்த்தது : kalyan
பார்வை : 438

மேலே