அழகான வாழ்ககை ஆனந்தமாய்

கிராமத்து மனிதர்களை,
இறைவன்
பண்டிகை நாட்களில்
படைக்கிறான்.
அவர்களுக்கு மட்டும்.!
அழகான வாழ்க்கை.
ஆனந்தமாய்!!

ஆனந்தமடைய,
ஒருமுறை ஊர்பக்கம்
வாருங்கள்.
போகும்போது தோன்றும்..
இங்கேயே இருக்கலாமோ.?

ஊர்வந்த நாளன்று
ஒன்றும் செய்யாதீர்கள்.
எந்தசோப்பும் இல்லாமல்,
ஏரிக்குளியல் போடுங்கள்.
ஆரோக்கிய வாழ்வு!
புத்துணர்ச்சி நேர்மை.
அத்தனையும் அடையுங்கள்!

அடைந்த கைகளோடு
எங்கள் ஆயாக்களை
பாருங்கள்!
அவர்தரும் உணவை,
அருந்திச் செல்லுங்கள்.!
உங்களூர் பவன்கள்...
பாவம் இலையைத்தான்
நிரப்பியிருக்கும்.

விருந்துண்ட மயக்கத்தில்,
விவத்பாரதி ஓசையில்.
களத்து மரத்தடியில்
கட்டிலில் அயருங்கள்.
கனவிலே வருவாள்!
கண்டிப்பாய் நம் அன்னை.

எழுந்து முகம் கழுவி
எங்கள் பெண்களிடம்
பேசுங்கள்.
பேசும் அணுகுமுறையை
அவரிடம் பயிலுங்கள்!

எத்தனை சதவீதம்.?
நீங்கள் நல்லவராய்
இருங்கள்.
ஒரு சதவீதம் குறைந்தாலும்!..
உதறுவது உறுதி!

சாயங்கால திண்ணைகளில்,
பெருசுகள் கதைகளைக் கேளுங்கள்!
நம்பிக்கை தரும்
அவைகள்!!...
அழுகாச்சி சீரியல் அல்ல.

நிலா மேல் ஏறுகிறது!
இரவு மெல்ல படர்கிறது!
அகாடமியில் சபாக்களில்,
அப்படியொரு
குரல் ஒலித்ததில்லை.!!

அந்த குரலேதான்.!
அவனேதான்.!
அதே பாடல்தான்.!!
அட.,நான்தான்!!


எங்கே பாடுங்கள்!!
"அழகான வாழ்க்கை
ஆனந்தமாய்...."


பி.கு:
இயற்றி
இசையமைத்து
பாடியவன்
-கிராமத்தான்.

எழுதியவர் : ராம்வசந்த் (22-Aug-14, 10:12 am)
பார்வை : 305

மேலே