தனிமை
தனித்து தெரிய வேண்டி
தனியே நிற்கும்
விந்தை மனிதர்கள்
தனக்குள் நினைக்கிறார்கள்
அது மோன நிலை என்று...
தனிமை முக்தி நிலையன்று.....
அது பித்து நிலை....!
தனித்து தனித்து
தனியே ஒதுங்குகின்றான்
தனியா குப்பைகளை
மனக் கிடங்கில் சேமிக்கின்றான்
ஒன்றா மனத்துடனே
துண்டாட நினைக்கின்றான்
தனிமை ஆயுதம்
அது எழுதா காகிதம்....
அழித்தொழிக்கும் சிந்தனையை
ஆழ் மனத்தில் தூவி விடும்
சர்வமும் நானென்ற
அகந்தையை பதிய விடும்...
தனிமை சிறை விட்டொழித்து
மனித சமுத்திரத்தில்
கலந்திடலாம் புனித நீராக....
இசைந்து வாரீர் தேராக!