உளி தாங்கும் கல்லும் சிலையாகும்

உளி தாங்கும் கல்லும்
சிலையாகும் ......அன்பே
வலி தாங்கும் நெஞ்சம்
என்றோ ஒரு நாள் உலகாளும் .....

மழை நீரும் ஒருநாள் சிப்பிக்குள் முத்தாகும்
அதுபோல் உன் விழி ஈரம் நொடிக்குள்
வீரமாய் உருமாறும் ........

சாலைகளில் வேக தடை உயிர் காக்கும்
உன் கவலை தடையும் அதுபோலே
என நினைத்தே .... மெல்ல சிரிப்பாய்
மீண்டும் வானம்பாடியாய்

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (23-Aug-14, 4:33 pm)
பார்வை : 346

மேலே