நாகரீக நஞ்சு
பச்சை நெல்லுக்
குத்திய அரிசை
எ டுத்து குளிர் நீரில்
ஊறவிட்டு உரலில்
போட்டு பக்கத்து வீட்டு
தோழியையும் உறவையும்
அழைத்து பட்டுப்போல்
மாவு இடித்து பல வகை
பலகாரங்கள் செய்து
உறவுகளுக்கும்
விருந்தினருக்கும்
கொடுத்துச் சுவைத்தது
அந்தக் காலம்
பல கடைகள் ஏறி
பார்த்து பல
வண்ணங்கள் கலந்த
கலர் கலர் இனிப்புக்களை
வாங்கி வந்து மங்கில்
அழகு பார்த்து அடுக்கி
வைத்து வரும் விருந்தினருக்கு
கொடுப்பது இந்தக் காலம்
கன்னி அவள் கை
மாத்தி மாத்தி உலக்கையை
பிடித்து அரிசி குத்தும் போது
முறை மாமன் ஒட்டி நின்று
ரசிப்பதும் சொந்த மச்சான்
பக்கமாக வந்து நின்று
கேலியாகப் பாடல் பாடி
கேலி செய்வதும் அந்தக்காலம்
மின்சார இயந்திரத்தில்
அள்ளிப் போட்டு ஓடவிட்டு
ஊரையே அழைக்கும் ஓசை
எழுப்பி சுவை கொடுக்க
என்று ஏதேதோ விசங்களை
கலந்து உடலுக்கும் உயிருக்கும்
கெடுதல் செய்வது இந்தக்காலம்
மறந்து போன பழமை
இழந்து விட்டோம்
உண்மையான சுவை
சுமக்கின்றோம் பல
கொடிய நோய்களை
அழிக்கின்றோம் அறிந்தே
நம் உயிர்களை
இ.சாந்தகலா