கவிதை

ஒரு தந்தையின் ஏக்கமும் எதிர் பார்ப்பு

படிப்படியாகப் படித்தேன்
ஏட்டுப் படிப்பையில்லை
வறுமையின் பிடியை.

ஏட்டைச் சுமந்து வீட்டில்
இருந்து கல்லுரியை நோக்கி
கலகலப்பாக போகும் என்னை
போன்ற சக உறவுகளை ஒட்டி
நின்று எட்டிப் பார்த்து நான்
கொண்ட ஏக்கம் யார் அறிவார்

கலங்கிய கண்ணீரை
துடைக்க ஒரு கைக்குட்டை கையில் இல்லாத
நிலையில் உடுத்திய பழந்துணியில் ஒத்தி எடுத்தேன்
என் கண்ணீரை எத்தனை
நாட்கள்

மடிப்பு கலையாத சட்டை
அடுக்கிய புத்தகம் இவை
இரண்டையும் தொட்டு
பாரக்கக்கூட கொடுப்பினை
இல்லையே மனம் வலிக்க
வலிக்க நான் சுமந்தேன்
என் தாயுடன் கல்லுரிக்கு
காலை சிற்றுண்டி

அன்றே உறுதி எடுத்தேன்
என் குடும்பத்தில் ஒரு
பட்டதாரியை உருவாக்க
வேண்டும் என்று என்
கனவை நினைவை நீதான்
நிஜமாக்க வேண்டும் ராஜா
நான் பெத்த மகனே

நான் கொடுக்கின்றேன்
சிலலறை என்னை உருக்கி
உழைத்தாவது என்று கெஞ்சலும்
கொஞ்சலுமாக தன் நெஞ்சில்
சேகரித்த ஏக்கம் என்னும் விதையை
மகன் மனதில் பதியமிடுகின்றார்
தந்தை எதிர்பார்ப்புடன

எழுதியவர் : இ.சாந்தகலா (24-Aug-14, 3:32 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kavithai
பார்வை : 76

மேலே