வேக்வம் கிளீனரால் சுத்தம் செய்யப்பட்ட கிரானைட் தளம்

Ravi Dalchand, new Bissell Symphony என்ற புதிய vacuum cleaner எந்த அளவு சிறப்பாக
சுத்தம் செய்கிறது என்பதை நிரூபிப்பதற்காக கனடாவின் Toronto subway platform ல்
கிரானைட் தளத்தை Bissell Symphony vacuum cleaner ஆல் சுத்தம் செய்து, கழுத்தில்
நாப்கினைக் கட்டி, அவர் கொண்டு வந்திருந்த பாஸ்தா என்ற உணவைத் தளத்தில்
கொட்டி, அதைப் புரட்டி எடுத்துச் சாப்பிட்டார்.

பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் Dalchand ரொட்டித் துண்டால் சாஸை வழித்துச்
சாப்பிடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். Bissell Symphony என்ற புதிய vacuum cleaner
கம்பெனி அவர்களின் vacuum cleaner 99.9 % கிருமிகளை அழித்து உணவை
உண்பதற்குத் தகுதியாக்குகிறது என்கிறது.

100 % தரம் வாய்ந்தது என்று senior brand manager at Bissell Canada கூறுகிறார்.
vacuum cleaner எவ்வளவுதான் தரமானது என்றாலும், உணவைத் தளத்தில்
கொட்டி புரட்டி எடுத்துச் சாப்பிடுவதை யாரும் முயற்சிக்கக் கூடாது என்றும்,
Food poison விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப் படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-14, 5:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 97

மேலே