அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அதிகாலையில் துயில் எழுந்து
சாணத்தினால் முற்றம் தெழித்து
சின்னதாய் ஒர் கோலமிட்டு
துவங்கும் காலைப் பொழுது...!

பற்பல பாத்திரங்கள் துலக்கி
பரணில் அழகாய் அடுக்கி
பரவசமாய் பக்தி தொழுது
காலை உணவும் தயாராக்கி..

கைகளால் துணி துவைத்து
கால்கடுக்க நின்று நீர்ப்பிடித்து
கணநேரம் தாமதிக்காமல்
சமையல்களும் சரியாக முடித்து

மணக்கும் வத்தக் குழம்பும்
நறமணமான மீன் குழம்பும்
சாப்பிடத் துடிக்கும் சாம்பாரும்
அனுதினமும் விதவிதமாய்

மதிமயங்கும் மாலை மல்லிகையை
தன் கைகளால் தோர்த்து
கண்ணிகள் நெருக்கமாய் அமைத்து
மகளுக்கு அணிந்து மகிழ்ந்து

மகளின் கண்ணீரையும் கூட
தன் முந்தானையில துடைத்து
அகம் மகிழ்விக்கும் தாயினால்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்....!!

எழுதியவர் : பிரியா பாரதி - தூத்துக்குட (27-Aug-14, 10:31 am)
பார்வை : 94

மேலே