என் கிறுக்கல்

ஏதேதோ எண்ணங்கள் என்னில் !
என்னில் அனைத்தும் நாமாக !
நாமாக நினைத்தது நான்தானே !
நான்தானே என்று அலட்சியமாய் நீ !

நீ என்றும் நீயாகவே !
நீயாகவே இருந்துவிட முடியுமா !

முடியுமா என் காதல் !
என் காதல் நீயாக இருக்கும் உன்னை !
உன்னை என் காதல் மாற்றும் !
மாற்றும் நீ நான் என்ற வார்த்தையை !
வார்த்தையை கூறுவாய் நாமாக மாற !

நாமாக மாற நான் எண்ணிவிட்டேன் !
விட்டேன் எனில் விடை பெறுவேன் !

பெறுவேன் உன்னை என்னில் !

எழுதியவர் : s . s (27-Aug-14, 8:08 pm)
Tanglish : en kirukal
பார்வை : 224

மேலே