கலைந்த கனவுகள்

நேசம் வளர்த்து பாசம்
என்னும் உரம் போட்டேன
மெதுவாக ஆசை என்னும்
மருந்துமிட்டேன் நெடுநாள்
வளரும் உறவென
நினைத்தேன்..!!!

நித்தம் நித்தம்
நினைவில் சத்தம்
இன்றிக் கொடுத்தேன்
முத்தம்..!!!

சுகமான சுமையென
உன் நினைவுகளைச்
சுமந்து மகிழ்ந்தேன்..!!!

உன் அன்பு மொழி
கேட்கவே விடியலைத்
திட்டி இரவை எதிர்
பார்ப்பேன்..!!

விடிந்த பின் உன்
முகம் பார்க்க
இறைவனிடம் வரம்
கேட்பேன்..!!

அளவு இல்லா அன்பு
வளர்த்தேன் எல்லை
இல்லா ஆசை வளர்த்தேன்
உண்மைச் சொல்ல துணிவு
இன்றி அதை மறைத்தேன்...!!!

என் உடலுக்கு உயிராய்
உன்னை நினைத்து
ஓராயிரம் கற்பனை
வளர்த்தேன்...!!!

காதலா காமமா நான்
அறியேன் ஆனால்
என்னுள்ளே வளர்ந்த
உறவு நிஜமென நீ
அறியாமலே போனாயே..!!

அடுக்கிய மண் பானை
சறுக்கி விழுந்து
நொறுங்கியது போல்
ஒரு நொடியில் நீ முகம்
திருப்பி என் மனசை
நொறுக்கி விட்டாயே அன்பே...!!!

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (28-Aug-14, 1:35 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kalaintha kanavugal
பார்வை : 863

மேலே