வெற்றியாளர்கள் நீங்கள்

மனிதாபிமானமுள்ள மனங்களெல்லாம்
உலகெங்கும் அழுகிறது உங்களுக்காய்
உங்கள் கண்ணீர்களை துடைத்தெறிங்கள்
துவண்டு வீழ மட்டும் துணிந்திடாதீர்கள்


தரைமட்டமாகின்ற வீடுகளும்
தாரைவார்க்கப்படும் செல்வங்களும்
குமிந்து கிடக்கிறது சுவனத்தில்
உங்களை வரவேற்றுக் கையளித்திட

யுத்தமிது இஸ்லாமியத்திற்கெதிரானது
அவர்களை வென்றாலும்
அவர்களை வெல்வதற்காய் மடிந்தாலும்
ஈருலகத்து வெற்றியாளர்கள் நீங்கள்

அப்பாவி அவலைகளைக்
கருவிலே கருவறுக்கும்
சாத்தானிய இஸ்ரேலியர்களுக்கு
சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது

உலகத்து அரக்கர்களும்
வால்பிடிக்கும் எம்மவர்களும்
மறுமையின் நீதிமன்றில் நிறுத்தப்டுவார்கள்
கொழுந்து விட்டெரியும் நரகம் காத்திருக்கிறது

அந்தோ பரிதாபம்
உலத்து இஸ்லாமியனே விழித்தெழு
உன் சகோதரன் அழிக்கப்டுகிறான்
உன் கரங்களை ஏந்தி
இறைவனிடம் ஒப்படைத்துவிடு

உலகின் திசைகளெல்லாம்
பலஸ்தீனப் பாலகர்களின்
பரிதாப அலறல்களும் மரணங்களும்
ஒலித்தவண்ணமிருக்கிறது
முடிவு ஏக இறைவனிடமே

மாந்தர்கள் மறைந்து
மனித சாத்தான்கள் வாழும் காலமிது
மரணம் ஒருமுறை மட்டுமே
அதுவே அனியாத்திற்கெதிராய்
அடைந்தேனும் சுவனம் எய்திடுவோம்

எழுதியவர் : ஹாசிம் (28-Aug-14, 1:42 pm)
பார்வை : 102

மேலே