திருத்தும் முறை
உன் அன்புக்குரியவரை திருத்த வேண்டுமா!
அவர் தவறை பச்சையாய் விமரிசித்து
சினக்க செய்ய வேண்டாம்!
உறவோ நட்போ அது உடையும்!
அவர் திருந்தவும் மாட்டார்!
தவறை பசுமையாய் சுட்டிக் காட்டி
விழிக்கச் செய்து பார்!
மெதுவாகத் திருந்துவார்!
பலனை உணர்ந்தால்
உன்னை
குருவாகவும் ஏற்கலாம்!

