கிறு கிறு காதல் - சந்தோஷ்

துவண்டிருக்கும் அவன் மனத்திரியில்
தூண்டிவிட்டாள் காதல்தீபத்தை.
பற்றிக்கொண்ட ஆசை
செல்பேசியில் அவளை
அழைத்து பேசத்தூண்டியது.


அவன் :

என் கண்ணுல
உன்ன படம்பிடிக்கணும்
என் தேகத்துல
உன்ன பதியம்போடணும்
கண்ணே -உன்ன
ஒருதரம் மீண்டும் பார்க்கணும்?.

அவள் :

=====தாரமா வருவேன் மாமா -நீ
=====தாரளமா அப்போ
=====தப்பு தப்பா
=====படம் பிடிச்சு
=====பதியம் போட்டுக்கோ ஆமா.


உன் குரல் மயக்குது
மீண்டும் மீண்டும் கேட்க
என் மனசு ஏங்குது


சும்மா சும்மா
அழைக்கவா ?
உம்மா கிம்மா
கிடைக்குமா?

=====சும்மா சும்மா
=====அழைச்சா என்
=====அம்மாகிட்ட மாட்டிகிட்டா
=====வம்பா கிம்பா போயிடுமே
=====என் கிறுக்கு மாமா.

ஆசையா கேக்குறேன் மானே- என்
மீசையும் சூடாகுது தேனே..!
என் ரெண்டு கன்னமும்
வரண்டு கிடக்குது
என் ரெண்டு விழியிலும்
கரண்டு அடிக்குது
ரெண்டு மூனு முத்தம்
கொடுத்தா குத்தமில்ல
ஒன்னு ஒன்னா
கூடினாலும் தோஷமில்ல

இது பொல்லாத இராத்திரி
படு இம்சையா போச்சடி....!

=====சரி சரி
=====பொறு பொறு
=====பொத்தி பொத்தி
=====நூறு நூறு கோடி
=====முத்தம் சத்தம் வச்சிருக்கேன்.
=====கொஞ்சம் பொறு மாமா
=====கொஞ்சமா கொஞ்சமா
=====கொஞ்சி கொஞ்சி தாரேன். நீ
=====கெஞ்சி கெஞ்சி கேட்டு -என்னை
=====மிஞ்சிட ஏங்கிட வச்சிடாதே
=====வில்லங்கம் விவகாரமா
=====ஆகிடவேண்டாம் ஆமா.
---------------------------------------------
அப்புறம் என்னங்க..!
எதிர்பார்க்கிறீங்க
நடக்க வேண்டியது
கொடுக்க வேண்டியது
எல்லாம் முடிஞ்சுபோச்சு.

டாடா டாடா


- இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (28-Aug-14, 9:05 pm)
பார்வை : 174

மேலே