விழியதிகாரம் - 1 சந்தோஷ்

விழியதிகாரம் I

முன் குறிப்பு :

இது கவிதையென்றால்
நான் கவிஞன் அல்ல.
ஏனென்றால்
இதை எழுதியது
என் விரல்கள் அல்ல
அவளின் விழிகள்.

வேண்டுக்கோள் :

என் நிஜகாதலிக்கு.!

இந்த விழியதிகாரம்
உனக்கு சொந்தமல்ல
எனக்கும் சொந்தமல்ல
ஏனென்றால்
இது எனது
சுயநினைவில்
எழுதப்பட்டது அல்ல.!

அவளின்
கருவிழி ஓரத்து
கண்மையில்
முத்தமிட்டு
மையெடுத்து -இக்கவிக்கு
கருக்கொடுத்தது
நான் அல்ல.
என் பேனாவும்
என் கனாவும்
மட்டுமே.

-----------------------------------------
விழியதிகாரம் !
இந்த தலைப்புக்கு
சொந்தக்காரி
ஓர் ஆணவக்காரி
கொஞ்சம் திமிர்பிடித்தவள்
அதிக திறன்படைத்தவள்
அன்பு கோட்டையென்றால்
அவள்தான் எனக்கு மகாராணி
உணர்வு வானமென்றால்
அவள்தான் எனக்கு நிலவொளி.

எங்களுக்குள்
காதல் இல்லை-ஆனாலும்
காதல்போல ஓர் உணர்வு
இல்லாமலும் இல்லை.


இது
சராசரி உணர்வுகளை
மிஞ்சத்துடிக்கும்
ஒரு விசித்திரக் காதல்

ஆம் நாங்கள்
காதலுக்கான மாற்று சொல்லற்று
விக்கி திக்கி தவிக்கிறோம்.

யாரவள்..?
யாரவள்?
எனது இந்த
விழியதிகாரத்தின் நாயகி
கற்பனையில் பிறந்து -என்
உண்மையாக்கப்பட்டவளோ?
உண்மையில் இந்த
மண்ணில் பிறந்து -என்
கற்பனையில் வாழ்பவளோ?

(விழியதிகாரம்-- தொடரும்)

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (29-Aug-14, 3:40 am)
பார்வை : 123

மேலே