ஒர் எழுத்தாளனின் கதை- தொடர்கிறது - சந்தோஷ்

ஓர் எழுத்தாளனின் கதை...!

மீண்டும் தொடர்கிறது....................................!!!

ஐந்து மாதங்களுக்கு முன்பு என்னால் எழுதப்பட்ட தொடர்கதையின் தலைப்புதான் ”ஒர் எழுத்தாளனின் கதை”.
அப்போது தளத்தில் எனக்கு ஏற்பட்ட சில மனக்காயங்களால் அந்த தொடர்கதையை முடிக்கவேண்டிய சூழ்நிலைக்கு என்னை நிர்பந்தப்படுத்தியது அன்றைய என் பக்குவம்.

கதையில் நாயகனின் பெயர் தினகரன். நாயகி காவியா. கல்லூரி மாணவர்கள், இருவரும் ஒருவருக்கொருவர் காதலை சொல்லாமல் காதலிக்கும் காதலர்கள்.
கதையின் களம் : கோயம்புத்தூர் நகரம் , பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகம்.


கவிஞர் முத்துமாணிக்கத்தின் தீவிர ரசிகன் என்பதால் அவரைப்போல அழகாக தெளிவாக அழுத்தமாக தமிழ் மொழியை பேச வேண்டும் என்ற இலட்சியத்திலிருந்த தினகரன் வாழ்க்கையில் பெரும் இடியாக அமைந்தது அந்த விபத்து. 12ம் வகுப்பு படித்தப்போது ஏற்பட்ட ஒரு விபத்தினால் மூளை பாதிப்புக்குள்ளாகும் தினகரன், சிகிச்சைக்குப்பிறகு குணமடைந்தாலும் அந்த விபத்தின் அதிர்ச்சி அவனுக்கு “திக்குவாயன்” என்ற பட்டத்தை கொடுத்தது.
மூளையில் ஏற்பட்ட பாதிப்பை பரிசோதித்த மருத்துவர்கள் தந்த மருத்துவ அறிக்கை தினகரனின் தந்தைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆம் தினகரன் அதீத ஆவேசம், கோபத்திற்கு உள்ளாக்கப்பட்டால் அது அவனின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதே அந்த அதிர்ச்சிக்கு காரணம். பள்ளியில் வகுப்பு ஆசிரியரின் கனிவான பேச்சும். தினகரனின் தந்தையின் அன்பும், உத்வேக சிந்தனை தூண்டலும் அவனுக்கு சற்று மாற்றத்தை கொடுத்தது.

திக்குவாயிலிருந்து முழுவதும் மீளாத தினகரன்..........! பின்னாளில் ஒரு மிகப்பெரிய பிரபல கவிஞனாக, எழுத்தாளராக மாற்றுப்போகும் மிக முக்கியமான மூன்றாண்டு போர்களமான கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். தினகரனுக்கு இந்த திக்குவாய் குறையால் ஏற்படும் அவமானங்கள், அந்த அவமானங்களிலிருந்து நாயகி காவியா எப்படி தினகரனை காப்பாற்றுகிறாள். இருவருக்கும் காதல் உணர்வு பூக்கும் தருணங்கள் என்று நகரும் கதையில் ,......
இயல்பாகவே ஆக்ரோஷபடக்கூடிய தினகரன், சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை கண்டு சினங்கொண்டு அதே வேகத்தில் கவிதை என்று எதையாவது எழுதி தன் கோபத்தை வெளிக்காட்டும் பழக்கமுடையவன். இப்படிப்பட்ட அவனின் ஆவேசம் கோபத்தினால் மூளை பாதிக்கப்பட்டு அவனது உயிருக்கு ஆபத்து நேரும் சம்பவங்களுடன் பல அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகளை முடிந்தவரை சுவராசியமாக, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் எழுதி இருக்கிறேன்.

தமிழ் மொழியை அழகாக , யாவரையும் மயக்கு விதத்தில் உச்சரிக்கும் கவிஞர் முத்துமாணிக்கத்தை முன்மாதிரியாக கொண்டுதான் தினகரன் எழுத்தாளனாக அவதானிக்க முயற்சி செய்கிறான், ( இதில் முத்துமாணிக்கத்தை கவிப்பேரரசு வைரமுத்துவை மனதில் வைத்து உருவகப்படுத்தியிருக்கிறேன் )

14 பகுதியாக எழுதப்பட்ட இந்த தொடர்கதையின் இதற்கு முந்தைய பாகங்களை சுருக்கி சிறுகதையாக விரைவில் பதிவு செய்து அதிலிருந்து தொடர்கதையாக எழுதும் முயற்சியில் நான்.


நமது எழுத்து இணையதளத்தை வேறொரு உருவக பெயரில் இணைத்து எழுதப்போகும் இந்த கதையின் தொடர்ச்சியில் 50 % உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்போகிறேன். உங்களில் சிலரும் இதில் கதாபாத்திரங்களாக உருவகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

. எழுத்து தள நண்பர்களும் சொந்தங்களும் “ ஓர் எழுத்தாளின் கதை “ என்ற தொடர்கதையை படித்து எனக்கு எப்போதும்போல உற்சாக தூண்டல் அளிக்க வேண்டுகிறேன். .
------------------------------------------------------------------------------------------------------------------------------------


சரி ,

யார் அந்த எழுத்தாளன் ?
. என் கற்பனையில் உருவாகிய நாயகனா?
இல்லை நிஜத்தில் உலாவும் ஒரு கிறுக்கனா?


:) :) :)

வேறொரு புதிய பரிணாமத்தில் கதை தொடரும்..........!!

-------------------------------------------------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (30-Aug-14, 3:43 am)
பார்வை : 166

மேலே