உன் முதல் பார்வை

விறகுகள் கீறி சிறுபொறி சுடரும்
காட்டுத்தீயோ
உன் முதல் பார்வை?

அமைதி நகரில் அழைபிதழ் இன்றி
பரவும் புயலோ
உன் முதல் பார்வை?

தெளிந்த வானில் சிறுதுளி எழும்பி
இடியுடன் மழையோ
உன் முதல் பார்வை?

வறண்ட என் உள்ளத்தில் காதல்
கவிதை ஊற்றே
உன் முதல் பார்வை!

எழுதியவர் : ராஜராஜசோழன் (30-Aug-14, 11:29 pm)
Tanglish : un muthal parvai
பார்வை : 1653

மேலே