விழுதில்லா ஆலமரங்கள்

பாத்து பாத்து பெற்றெடுத்தாள் அம்மா
பொத்தி பொத்தி வளர்த்தெடுத்தான் அப்பா!

பிள்ளை கல்வி கற்க
தூக்கத்தை தொலைத்தாள் அம்மா
தன் சொத்தையெல்லாம் இழந்தான் அப்பா!

பிள்ளை வேலைக்குச் செல்ல
மரியாதை எல்லாம் இழந்தாள் அம்மா
கட்டாய ஓய்வால் வேலையிழந்தான் அப்பா!

பிள்ளையின் குடும்ப நிம்மதிக்காய்
மகனையே இழந்தாள் அம்மா
மொத்தத்தையும் இழந்தான் அப்பா!

இன்று
முதியோர் இல்லத் தோட்டத்தில்
சாயும் நேரம் எண்ணி விழுந்துக் கிடக்கின்றன
விழுதில்லா இந்த ஆலமரங்கள்....!

அப்பொழுதும்கூட தன் மகனும்
என்றாவது விழுதில்லாமல் போய்விடுவானே
என்றே வருந்திக்கொண்டிருக்கின்றன......!

எழுதியவர் : அலெக்சாண்டர் (31-Aug-14, 1:52 am)
பார்வை : 65

மேலே