அண்ணனென்னும் அத்தியாயம்
..."" அண்ணனென்னும் அத்தியாயம் ""...
(பாகம் இரண்டு)
தங்கை : -
அன்பு அண்ணனுக்கு
ஆசை தங்கையானேன்
பாசத்தால் எனையணைத்து
நேசத்தோடு வளர்த்தால்
தந்தையில்லா கவலையை
நீ தந்ததில்லை எப்போதும்
வீட்டு பாத்திரத்தில் அன்னம்
குறைவேயாகினும் உன்னன்பு
குறையாததினால் என்னை
பசியாற்றி உன் பசி மறந்தாய்
அம்மா சொல்ல கேட்டதுண்டு
தொட்டிலில் தூங்கியதைவிட
உன் தோளில்தான் அதிகமென
அறியா வயதிலும் நான்
அம்மா என்றழைத்ததைவிட
அண்ணாவென்பதே உண்மை
தந்தை அவர் இருந்திருந்தால்
உனக்கென்றும் எனக்கென்றும்
நமக்கு பங்காகும் பாசமங்கு
எல்லாமும் நீ எனக்கு தந்து என்
தந்தையுமானாய் அண்ணனே ,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...