நானும் மனிதன் ஆகிறேன் - மணியன்

முதலில் என் கதையைக் கேட்பதற்கு நீங்கள் வந்தததற்கே நான் நன்றி சொல்லியாக வேண்டும்.என்ன பார்க்கிறீர்கள் சில நாள் முன்பு வரை நான் இந்த மாதிரி சில நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் இல்லாமல் கை, கால் , மூக்கு இத்தியாதி இத்தியாதி எல்லாம் அளவாகவும் கொஞ்சம் அழகாகவும் இருந்த காரணத்தால் நானும் மனிதன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சம்பவம் நடந்து என் வாழ்க்கையில் நான் மனிதன் ஆன கதையைத்தான் உங்களுடன் பகிரப் போகிறேன்.

என்னதான் படித்து முடித்தாலும் வேலை உடனே கிடைத்து கைநிறைய சம்பளம் வாங்கும் பாக்கியம் எல்லோருக்கும் உடனே வாய்க்காது. எனக்கு இரண்டுமே உடனே நடந்தது. வேலை கிடைத்து சில நாட்களிலேயே அம்மா என்னை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். வேறு என்ன கல்யாணம்தான். ஒரு பெண் பார்த்து வைத்திருக்கிறேன்.உடனே வந்து பெண்ணைப் பார்த்து விட்டுப் போ என்றார்கள். நானும் வருங்கால மனைவி பற்றி பல கனவுஎள் கண்டு கொண்டிருந்தவன்தான். அம்மா பெண்ணைப் பற்றி சொல்லும் போது ஏதோ ஒன்றை மறைப்பது போல் மனதிற்குப் பட்டதால் என்ன என்று துருவி துருவி கேட்டதால் சொல்லி விட்டார்கள்.

பெண் லட்சணமா இருப்பாள் . படித்த பெண்தான்.ஆனால் கொஞ்சம் திக்கு வாய் அவ்வேவுதான்டா.

அட என்னம்மா. . இப்ப என்னம்மா. வேறு நல்ல பெண்ணாகப் பார்க்கலாமே.என்ன அவசரம் என்று நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அம்மா கேட்ட பாடில்லை.
என் சிறு வயதிலேயே என் தகப்பனார் இறந்து விட்டதால் ஒரே பையனான என்னை நல்ல வளர்த்து ஆளாக்கிய அன்னையை எதிர்த்துப் பேச மனம் வரவில்லை. நேரில் போய் பெண்ணைப் பார்த்து அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்து விடலாம் என்று மனதில் எண்ணி அன்னைய தினம் காலை ரயில்க்கு கிளம்பி விட்டேன்

எனக்கு குளிசாதரண வசதி கொண்ட பெட்டியில் இடம் கிடைக்க வில்லை. இரண்டாம் வகுப்பு பதிவு செய்த பெட்டியில் தான் இடம் கிடைத்தது.எனது இருக்கை சன்னல் ஓரம் எதிர் எதிர் ஒற்றை இருக்கை கொண்ட இடம்.

ரயில் கிளம்பும் முன் கண்களை மூடிக்கொண்டு சும்மா உட்கார்ந்தேன். கிளம்பும் போது கண் விழித்துப் சுற்றும் முற்றும் பார்த்தேன். எனக்கு அறுவெறுப்பாக இருந்தது. எதிர் இருக்கையில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒருவன்.அழுக்கு சட்டை அழுக்கு பேன்ட். கையில் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகள்.ஒன்றை பிர்த்து தின்று கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து சிரித்து 2 பிஸ்கெட்டுகளை நீட்டினான்.நான் அவசரமாக மறுத்து நடை பாதைக்கு அந்தபக்கம் ஆறு இருக்கைகளில் உள்ளவர்களை நோட்டம் விட்டேன்.

ஒரு கிராமத்தான் . கையில் மஞ்சப்பை. ஒரு குடும்பம் 3 குழந்மைகள். பிரெட் பாக்கெட்டை இழுத்துப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இன்று நமது பயணம் இப்படியா ஆக வேண்டும் என்று எண்ணி மனதில் வேதனைப் பட்டேன். இதற்குள் கிராமத்தான் மஞ்சப்பைக்குள்ளே கையை விட்டு சில வாழப்பழங்களை வெளியே எடுத்து அந்த குழந்தைகளிடம் நீட்டினான். சண்டை போட்டுக்கொண்டிருந்த குழந்தை அதன் அம்மாவைப் பார்க்க அம்மா வாங்கிக்கோ என்பது போல தலையாட்டினாள்.குழந்தைகள் ஆவலாக ஆளுக்கொன்று வாங்கிவிட்டு பழத்தின் தோலை உரிக்கத்தொடங்கினார்கள். எதிர் இருக்கை அழுக்கனிடமும் ஒரு பழத்தை நீட்ட அவனும் ஒரு மீதிரி புன்னகை செய்து பெற்றுக் கொண்டான்.அடுத்து என்னிடமும் கிராமத்தான் ஒரு பழத்தை நீட்ட நான் ஒரு முறைப்பு முறைத்தான். அவன் சிரித்துக் கொண்டே.ஏன் சார் வாழைப்பழம் பிடிக்காதா என்று கொஞ்சமும் சலனமின்றி பழத்தை உரிக்க ஆரம்பித்தான்.

எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. கவுண்டமணி வசனம் அட ராமா என்னை ஏன் இந்த கழிசடைகள் கூடல்லாம் சேர்த்து வைச்சிருக்கே என்று மனதுக்குள் சொல்லியபடி இருக்கையில் சாய்ந்து உறக்கம் வராதா என்று வராத உறக்கத்துக்காக கண்களை மூடிக் கொண்டேன்.

எவ்வளவு நேரம் ஆயிற்று என்று தெரியவில்லை.கொஞ்சம் உறங்கி விட்டேன்.கண் திறந்து பார்த்தால் எதிர் இருக்கை அழுக்கன் என்னைப் பார்த்து ஒருமாதிரி நிலை கொண்ட பார்வை பார்த்து ஒரு மாதிரி முறைத்துக் கொண்டிருந்தவன் ஒரு மாதிரி அமானுஷ்யக் கூச்சல் போட்டவன் அப்படியே எங்கள் இரண்டு பேரின் இருக்கையின் இடையிலும் என் மீது பாதியுமாக கீழே விழந்தான். எனக்கு ஒன்றுமே ஓட வில்லை.
கிரமத்து மஞ்சப்பைக்காரன் உடனே கத்தினான்.
சார் அவனைக் கொஞ்சம் கையைப் பிடித்து நடைபாதையில் போட ஒத்தாசை பண்ணுங்க .அப்படியே அவன் கைகளை இருக்கையின் கால்களைப் பிடிக்க வையுங்கள்.என்று கத்தி முடித்துக் கொண்டே இருக்கைகளுக்கு இடையில் உள்ள நடைபாதையில் அவனைக் கிடத்த அழுக்கனின் இருகால்களையும் பிடித்து தூக்கினான். நானும் உடனே அவன் சொன்னது போல அழுக்கனின் இருகைகளையும் பிடித்து தூக்கி அவனைக் கிடத்தியவுடன் அவன்கைகளைப் பிடித்து இருக்கையின் கால்களைப் பிடிக்கும் படிச் செய்தேன். இதற்குள் மஞ்சப்பை அழுகனின் வாயைத்திறந்து தன் தோளில் உள்ள துண்டில் ஒரு சிறு பகுதியை அவன் வாய்க்குள் திணித்தவன் அழுக்கனின் கால்களைப் பிடித்து பாதங்களைத் பர பரவென்று தன் உள்ளங்கைகளால் தேய்க்கத் தொடங்கினான்.இதை நான் சொல்லி நீங்கள் படித்த நேரம் இருக்கிறதே அதில் இருபதில் ஒரு பகுதி நேரத்தில் இத்தனையும் நடந்து முடிந்தது. அழுக்கன் இப்போது காலை உதைப்பது போல் இழுத்து ஆட்ட தலை அங்கும் இங்கும் வெடுக்கென்று அசைய அவன் கைகளோ இருக்கையின் கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. வாயில் வைத்த துண்டைமீறி அவனது வாயிலிருந்து எச்சில் போல வடிந்தது. எனக்கு எல்லாமே பயமும் அதிர்ச்சியாக இருந்ததால் கிராமத்தான் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன் .அவனோ இளைஞனின் பாதத்தை மும்முரமாக தேய்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் ஆனது. கைகால்கள்.தலை வெட்டுவது நின்றது. இளைஞன் கண்களை மூடியபடியே அமைதியானான். கிராமத்தான் தேய்ப்பதை நிறுத்தியவன் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்து சிரித்து

ரொம்ப டேங்கஸ் சார் என்றான்

பரவாயில்லை. இவல் உங்க கூட வந்தவரா

இல்லை. அய்யோ பாவமில்ல சார் .

அது சரி. உங்களுக்கு எப்படித் தெரிந்தது.

சார் அவன் உங்களையேப் பார்த்து ஒரு மாதிரி முறைத்தபோதே நான் சுதாரிச்சிட்டேன். சார்.

துண்டை எதுக்க் வாயில வச்சீங்க. இப்ப பாருங்க உங்க துண்டு முழுவதும் அவன் எச்சில்.

அட . . என்ன சார் பேசுற. . இந்த மாதிரி நேரத்தில அவன் பல்லுக்கு இடையில நாக்கு வந்தால் அதை அப்படியே கடிச்சு துண்டாக்கிடுவாங்க சார்.துண்டு என்ன சார் பெரிய துண்டு.சவத்தை அலசினா சரிப்பூடும்.இல்லைன்னா வேற துண்டு. போசார்.

எனக்குள் ஒரு ரசாயண மாற்றம். உள்ளே எங்கோ ஆழ்மனதில் எதுவோ நெட்டி முறிக்கும் சத்தம் எனக்கு கேட்க ஆரம்பித்தது.

அது சரிங்க இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன்.

என்ன சார் இப்படி கேட்குற.. எம்பொஞ்சாதிக்கும் இந்த நோவு உண்டு. ஊர்ல இருக்கா.துணைக்கு அவளோட அம்மா இருக்காவ. நான் பட்டணத்தில கூலி பார்க்குறேன். கொஞ்சம் மழை பெய்ஞ்சு குளம் பெருகிடுச்சாம். என் மாமியார் போன் பண்ணிச் சொன்னாவ. அதான் ஊருக்கு கிளம்பிப் போறேன். இன்னும் கொஞ்ச நாளு எம்பொஞ்சாதிகூட நான் இருக்கலாம். என் புள்ளையையும் தொட்டு பார்த்து கொஞ்சலாம்.

எம்பொஞ்சாதிக்கும் இந்த நோவு உண்டுன்னு அவன் சொல்லிய பிறகு அவன் சொன்ன எதுவும் என் காதில் விழவில்லை. மனதுக்குள் யாரோ எழுந்து உட்கார்ந்தது போல மட்டும் உணர முடிந்தது.
குறிப்பு
அது சரிப்பா. . கல்லாணத்துக்கு முன்பே உன் மனைவிக்கு இந்த நோய் இருப்பது தெரியுமா.

தெரியமே.

அப்ப ஏன். . . .

ஏன்னா. . கழுத என் மாமன் பொண்ணு சார்.நாம கட்டிக்காட்டா வேற எவன் கட்டுவான். தெரிஞ்சுதான் கட்டிகினேன்.

இப்போது என் மனசுக்குள் நீங்கள் நினைப்பது சரிதான் மனிதன்தான் முழுசாக எழுந்து விட்டான். அம்மா அந்த பெண்ணையே கட்டிக்கிறேன்.என்று அம்மாவிடம் சொல்வது போல சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
என்னசார் என்றான் கிராமத்தான்.
என்னைப் பார்த்து கண்விழித்த அந் இளைஞன் சிரித்தான்.
பதிலுக்கு எனக்குள்ளே எழுந்த மனிதனும் சிரித்தான். கீழே படுத்திருந்த இளைஞனுக்கு நான் கை கொடுத்தேன் அவன் எழ வேண்டி.
என்னை எழுப்பி விட்டவன் அவன்தானே. . .

எழுதியவர் : மல்லி மணியன் (1-Sep-14, 3:34 pm)
பார்வை : 269

மேலே