பரிகாரம்

'சே..எப்ப பார்த்தாலும்?!'
என்று சலித்துகொள்ளும் அப்பா..
இப்போதெல்லாம்,
ஒன்றோ,இரண்டோ போட்டுவிடுகிறார்.

வெள்ளிகிழமை,விசேஷம் அன்று
மட்டும் விளக்கேற்றும் அம்மா
சமீபகாலமாக,
எல்லா நாட்களிலும் ஏற்றுகிறாள்.

அக்கா கூட இப்போதெல்லாம்
பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கு
மறுப்பேதுமின்றி,
பாடத்தில் சந்தேகம் தீர்க்கிறாள்.

வினா எழுப்பும் அண்ணன் கூட
தற்போது
வினாவின்றி லிப்ட் தருகிறான்.

தம்பி,தங்கைகள் கூட
அடம்பிடிப்பதில்லை,
வெளியே செல்ல வேண்டி..

மறைப்பேதும் இன்றி
மாற்றமடைகின்றன..
தவறோ என ஒவ்வொன்றும்
திருத்தபடுகின்றன..

வேலையை வேண்டி
மாறிவரும்
வேலையில்லாதவனின்
வீடு !..

எழுதியவர் : கல்கிஷ் (1-Sep-14, 6:15 pm)
Tanglish : parigaram
பார்வை : 79

மேலே