தூக்கம் தொலைந்த இரவுகள்

என்னிரு கண்களும் மூடமறுத்து
சுழன்று புரண்டு நித்திரையின்றி
நினைவுகளின் நிழல்களில்
கடத்திய நாட்களின் தவிப்பை
என் தலையணை சொல்லும்

என்னவனங்கிருக்க
நானிங்கு தனித்திருக்க
நான்கு சுவர்களுக்குள்
சிறைபிடித்த இரவுகளில்
சிற்றின்பமேனுமின்றி
நானிருந்த தனிமை விபரிக்கும்

துணைதேடிய உணர்வுகளுக்கு
விலங்கிட்டு வேதனைதந்து
யார் யாரினதோ வெற்றிக்கு
தான் தோற்றுப்போன வாழ்வை
என் வயதுங்களிடம் விவாதிக்கும்

தூரத்துத் தொலை பேசிகளும்
துயரடைந்த நிகழ்வுகளும்
துடிதுடித்த மனதினை
துயில் கொள்ளத் தடுத்திருந்து
தூக்கம் தொலைந்த இரவுகளாக்கியது

எழுதியவர் : நேசமுடன் ஹாசிம் (2-Sep-14, 4:37 pm)
பார்வை : 779

மேலே