தேன் துளிகள்

மலர் பாதங்களுக்கு
கிரீடமாயின - உன்
கொலுசுகள் ..

********************************
பிடுங்கும் பொழுது
ரணமாக்குகின்றன
இதயத்தில் குத்திய
உன் விழி முற்கள் ...!

****************************

பாதங்கள் பதியாமல்
ஊர்வலம் போகின்றன
மழை...
*********************************

யார் தூக்கி செல்கிறார்கள்
என தெரிவதில்லை
கருவறைக்குள்ளும் .. கல்லறைக்குள்ளும்...!
*******************************************************************

நினைவு சுமையுடன்
டிக்கெட் இல்லா பயணம்
வாழ்க்கை...
**************************************

சிறு துளியின் பயணம்
கடலை நோக்கி
மனிதனின் பயணம் ...?
*****************************************]

என்னுள் எரிகிறது
அவளின்
விழி விளக்கு ....!
>>>>>>>>>>>>>>>>>>>>>>

முதல் சந்திப்பிலேயே
முட்டி மோதிக்கொண்டன
நம் நிழல்கள் ...!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எழுதியவர் : வெற்றிநாயகன் (3-Sep-14, 5:01 am)
Tanglish : haikkoo
பார்வை : 108

மேலே