தமிழ் மொழி
தமிழ் மொழி
'''''''''''''''''''''''''''''''''
அன்னை அன்போடும் ,ஆசையோடும்
சொல்லிக்கொடுத்த மொழி,
ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்
அகிலத்திற்கு அறிமுகப்படுத்திய மொழி,
இயல்,இசை , நாடகம் இம்மூன்றிற்கும்
இயக்குனாராக செயல்படுகின்ற மொழி,
ஈசனும் தன மகனிடத்தில் பற்றோடும்,
பாசத்தோடும் கற்றுக்கொண்ட மொழி,
உலகத்திலுள்ள பிற மொழிகளையெல்லாம் விட
முன்னரேத் தோன்றிய மூத்தக்குடி மொழி,
ஊர்வலத்தின் போது கொடியசைத்து
கோசமிட உதவுகின்ற மொழி,
எல்லாவற்றுக்கும் மேலாக!
ஏழையின் உள்ளத்தில் தோன்றுகின்ற
கற்பனைகளை 'கவிதைகளாக' எழுதுவதற்கு
கைகொடுக்கும் மொழியே! ''தமிழ் மொழி "
'''''''''''''''''''''''''''''''''
என்றென்றும் அன்பன் !
அருண்தாசன் ,,,..