உணர்வுகள்

என் வாழ்வில் வசந்தம் வந்த நேரம்
எனக்கு வந்தது சந்தூசம்
என் வாழ்வின் இலை உதிர் காலம்
வந்த போது எனக்கு வந்தது கவலை
கவலையுடன் வருவதே அழுகை
கவலை கடந்தவுடன் வருவது சிரிப்பு
என்னை அறியாமல் சிரித்தேன்
எனை அறியாமல் அழுதேன்

அழுகை முடிந்ததும் இவ்வளவு சனத்துக்கு
முன்னால் அழுதேனே எனும்போது வருவது
வெட்கம் - முகம் சிவந்தது என் கண்கள்
இருண்டன - இப்போது வருவது பயம்
எங்கே நான் இலந்துவிடப்போகிறேனோ என்று

இப்படியாக மாறிமாறி வந்த எண்ணங்களாலும்
உணர்வுகளாலும் நான் குழப்பமடைந்தேன்.
அல்லது குழம்பிப்பூனேன்.

எழுதியவர் : புரந்தர (3-Sep-14, 5:57 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : unarvukal
பார்வை : 81

மேலே