விழிகள்00000
உன் விழிகளின்
காதல் பார்வையால்
தடம் புரண்டேன்
தடுமாறுகின்றேன்
தத்தி தத்தி நடக்கின்றேன்
உன் விழிகளால்
உன் சம்மதம் தருவாயா
உன்னோடு உலகை பார்க்க ??
கதிர் வீச்சு விழியாளே!
காத்துஉள்ளேன் உன்
கரம் பிடிப்பதற்கு !
விழிகளை மூடி என்
வாழ்க்கையை மூடி விடாதே
என் விழிகள்
பார்வை அற்று போய் விடும்
மனக் கண்ணை திற !
மண வாழ்க்கையில் உன்னோடு
மணமாய் இணைந்திட ஆசை !!!
என்னவளே! நான்
உன்னவனாக ஆசை படுகின்றேன்
விழிகளை திற !