காதல் கசக்குதடி

தவணை முறையில் சிரிக்கிறேன்...
கவலை யாவும் மறக்கிறேன்...
காதல் சிறகை விரிக்கிறேன்...
கவிதை வானில் பறக்கிறேன்...

என் நெஞ்சில் என்றும் நீயடி...
நீ பேசும் வார்த்தை தீயடி...
கொஞ்சம் என்னை பாரடி...
உன் நெஞ்சுக்குள்ளே யாரடி....

பதில் கூற ஏனோ! மறுக்கிறாய்...
என் நாடி, நரம்பை அறுக்கிறாய்...
இவை யாவும் உன்னால் தானடி...
உனை இழந்தால் வாழ்க்கை வீணடி....

எழுதியவர் : அகத்தியா (6-Sep-14, 12:44 am)
பார்வை : 111

மேலே